Saturday, April 30, 2011

மத்திய அரசு இனியேனும் விழித்திட வேண்டும்?

சென்னை,ஏப்.29: தமிழின படுகொலையைக் கண்டிக்கும் வகையில் இலங்கையுடனான தூதரக உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்று புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
 இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
 இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் இதுவரை மெüனம் காத்துவந்த மத்திய அரசு இனியேனும் விழித்திட வேண்டும். உலக அரங்கில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டுள்ள இலங்கையின் அதிபர் ராஜபட்சவின் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்தத் தமிழின படுகொலையைக் கண்டிக்கும் விதமாக இலங்கை அரசுடனான தூதரக உறவை முறித்துக் கொள்ளவேண்டும். இதுவரை இலங்கைக்குச் செய்துவரும் பொருளாதார உதவிகளையும் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...