வங்கிச் சேவை இல்லாத கிராமங்களில் பணப் பரிமாற்ற சேவை விரைவில் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, இந்திய அஞ்சல்துறை, பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) உடன் கைகோர்க்கிறது. இந்த நடமாடும் பணப் பரிமாற்ற சேவையை, சண்டிகாரில் மத்திய உள்தறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு இணையமைச்சர் குருதாஸ் காமத் துவக்கி வைத்தார். இதவர், சண்டிகாரிலிருந்து, பீகாரின் பாட்னாவில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறவனத்திற்கு இந்த சேவையின் மூலம் ரூ. 1000 பரிமாற்றம் செய்து சேவையை துவக்கி வைத்தார். இந்திய அஞ்சல் துறையின் டைரக்டர் ஜெனரல் ராதிகா துரைசாமி கூறியதாவது, எலெக்ட்ரானிக் மனி ஆர்டர் மற்றும் இன்ஸ்டெண்ட் மனி ஆர்டர் உள்ளிட்ட இணையதள அடிப்படையிலான பணப் பரிமாற்ற சேவைகள் இருந்தாலும், தற்போது துவங்கி உள்ள சேவை மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெறும். ஏனெனனில்,. தற்போது அனைவரிடத்திலும் மொபைல் போன் காணப்படுகிறது. நாடு முழுவதும் 1,55,000 தபால் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த புதிய சேவை மூலம், பணப் பரிமாற்றங்கள் எளிதாகவும் விரைவாகவும் நடைபெறுவதோடு மட்டுமல்லாமல், மனி ஆர்டருக்கான கமிஷனும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது என அவர் கூறினார்.
No comments:
Post a Comment