இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இந்துக்கள், சீக்கியர் உள்ளிட்டோர்களுக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இதுபற்றி அவர் கூறியதாவது, இந்த இனிய தீபாவளி திருநாளில், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கொண்டாடி மகிழும் முறை இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருகிறது. இது இனிமையான திருவிழா ஆகும். வெற்றியின் திருவிழாவாகவும் தீபாவளி கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வெள்ளை மாளிகையில், தீபாவளிக் கொண்டாட்டத்தை எனது குடும்பத்தினருடன் கொண்டாடுவது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment