கம்ப்யூட்டர் இன்றி ஒரு அணுவும் அசையாது' என்றதற்போதைய அறிவியல் வளர்ச்சிக்கு, முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர்களில் ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.ஆரம்ப கால கம்ப்யூட்டர் முதல் இக்கால "ஐபேட்' வரை உள்ள முக்கிய கண்டுபிடிப்புகள், இவரது மூளை "ஒர்க்ஷாப்'பில் உருவானவை. சிறு வயதில் சாப்பாடுக்கே வழியின்றி இருந்து, பிற்காலத்தில் சாதனையாளராக வளர்ந்தவர். அனைத்துக்கும் காரணம், இவரது கடின உழைப்புமட்டுமே. திறமையும் லட்சியமும் இருந்தால் எந்தசிகரத்தையும் எட்ட முடியும் என உலகுக்கு காட்டியவர்.ஒரு சாதாரண குடிமகனின் மறைவுக்கு, பல நாட்டு அதிபர்களும் பிரதமர்களும் இரங்கல் தெரிவிக்கின்றனர் என்றால், இவரது முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். வாழ்க்கையில்பள்ளத்தையும் பார்த்தவர், உயரத்தையும் தொட்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ். இந்தக் கால இளைஞர்களுக்கு இவரது வாழ்க்கையே ஒரு பாடம் தான்.
courtesy: dinamalar
courtesy: dinamalar
No comments:
Post a Comment