திருப்பூர்:"பேக் போஸ்ட்' பார்சல் சேவை, தபால் துறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், போஸ்ட் ஆபீஸில் இருந்து வெளியூருக்கு அனுப்பிய பார்சல், உரியவரை சென்றடைந்ததா என்பதை தெரிந்து கொள்ள www.indiapost.gov.in, என்ற இணைய தளத்தை நாடலாம் என தபால் துறை தெரிவித்துள்ளது.திருப்பூர் தலைமை தபால் நிலைய கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:"பிளாட் ரேட் பார்சல்' சர்வீஸ் என்ற சேவையை தபால் துறை துவக்கியுள்ளது. பார்சல் அனுப்ப வருபவர்கள் பொருட்களை "பேக்கிங்' செய்து கொண்டு வருவதில் சிக்கல் இருந்தது. வாடிக்கையாளர் சேவையை எளிதாக்கும் நோக்கில், "பேக் போஸ்ட்' என்ற புதிய சேவையை கொண்டு வந்துள்ளோம். வாடிக்கையாளர் அனுப்ப நினைக்கும் பொருளை கொண்டு வந்தால் போதும். பார்சல் அனுப்ப தேவையான பெட்டி, துணி, தெர்மாகோல் எங்களிடம் உள்ளது. இங்குள்ள பணியாளர்கள், இயந்திரங்கள் மூலம் பிரத்யேக முறையில், "பேக்கிங்' செய்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு அனுப்புவோம்.ரூ.50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்களை அனுப்புபவர்களுக்கு தவணை முறை கடன் சலுகை வழங்கப்படும். சிறிய, நடுத்தர, பெரிய, மிகப் பெரிய அளவிலான பெட்டிகள், ஒரு கிலோ முதல் 15 கிலோ வைக்கும் அளவுகளில் உள்ளன.சாதாரணமான "பேக்கிங்' 50 முதல் 160 வரை, ஸ்பெஷல் "பேக்கிங்' 80 முதல் 275 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனுப்பிய பார்சல் நம்பரை, www.indiapost.gov.in என்ற இணைய தளத்தில் பார்த்தால், பார்சல் எங்கிருக்கிறது? உரியவரை சென்றடைந்து விட்டதா என்பது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள முடியும், என்றார்.
courtesy: dinamalar.
No comments:
Post a Comment