Sunday, September 18, 2011

சிக்கிம் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 40

கேங்டாக் : சிக்கிம் மாநிலத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. சிக்கிம்மில் 19 பேரும், மேற்குவங்கத்தில் 7 பேரும், நேபாளம் திபெத்தில் தலா 7 பேரும் பலியாகியுள்ளனர். நேபாளத்தில், நிலநடுக்கத்திற்கு ஐந்து பேர் பலியாகியுள்ளனர். கடும் மழையால் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. சிலிகுரி - கேங்டாங் சாலையில் நான்கு இடங்களில் பாதிப்பு ஏற்பட்டள்ளதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலமான சிக்கிம் தலைநகர் கேங்டாக்கிலிருந்து 60 கி.மீ., தொலைவில் உள்ள சிக்கிம் - நேபாள எல்லையை மையமாகக் கொண்டு நேற்று மாலை 6.10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 என பதிவானது. இதைத் தொடர்ந்து, அந்த பகுதியில், அடுத்தடுத்து மூன்று முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தால், கட்டடங்கள் இடிந்து விழுந்தன; ஏராளமான வீடுகளில் விரிசல் ஏற்பட்டன. மக்கள் பீதியுடன், தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
சாலைகளில் விரிசல் ஏற்பட்டதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பேகாங் பகுதியில் உள்ள, "இந்தோ திபெத்தியன் எல்லை போலீஸ்' படைக்குச் சொந்தமான இரண்டு கட்டடங்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிலர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.


சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள், தலைநகர் டில்லி, உ.பி., பீகார், அசாம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களிலும் உணரப்பட்டன. அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசத்திலும் உணரப்பட்டது.
courtesy :dinamalar

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...