Sunday, September 18, 2011

மல்யுத்தம்: இந்திய வீரர் சுஷில் குமார் தோல்வி

இஸ்தான்புல் :உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில், "நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கிய இந்திய வீரர் சுஷில் குமார் தோல்வி அடைந்து வெளியேறினார்.


துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் 66 கி.கி., எடைப்பிரிவு இரண்டாவது சுற்றில், இந்தியாவின் சுஷில் குமார், உக்ரைனின் ஆன்ட்ரி ஸ்டாட்னிக்கை சந்தித்தார்.இதன் முதல் செட்டின் முடிவில் சுஷில் குமார் 2-0 என முன்னிலை பெற்றார். பின் எழுச்சி கண்ட ஸ்டாட்னிக், இரண்டாவது செட்டின் முடிவில் 4-2 என முன்னிலை வகித்தார். மூன்றாவது செட்டில் இருவரும் தலா ஒரு புள்ளிகள் மட்டும் பெற்றனர். இறுதியில் சுஷில் குமார் 3-5 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.


கடந்த ஆண்டு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சுஷில் குமார், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். இம்முறை இவர், இரண்டாவது சுற்றோடு வெளியேறி, "நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ள தவறினார். இத்தொடரில் பங்கேற்ற மற்ற இந்திய வீரர்களும் ஏமாற்றினர்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...