Thursday, August 25, 2011

FOOD BALL CAPTIAIN பாய்ச்சுங் பூட்டியாவிடை பெற்றார்

புது தில்லி, ஆக.24: இந்திய கால்பந்து வீரரும், முன்னாள் கேப்டனுமான பாய்ச்சுங் பூட்டியா ஓய்வுபெற்றார். 34 வயதான இவர், 16 ஆண்டு காலம் இந்திய கால்பந்து அணிக்காக விளையாடியவர். 10 ஆண்டுகள் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர்.

 கடந்த ஓர் ஆண்டாக காயத்தால் அவதிப்பட்டு வந்த அவர், இப்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். தில்லியில் உள்ள அகில இந்திய கால்பந்து சங்கத்தின் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

 இந்திய அணிக்காக கால்பந்து விளையாடிய 16 ஆண்டு காலம் அற்புதமானவை. இந்தியாவுக்காக பங்கேற்ற ஒவ்வொரு போட்டியிலும் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடினேன். 2008-ல் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சேலஞ்ச் கோப்பையை வென்றது, ஆசிய கோப்பை போட்டியில் விளையாட தகுதிபெற்றது ஆகியவை எனது கால்பந்து வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணங்கள்.
             வருங்கால கால்பந்து வீரர்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன் என்றார். 2014 உலகக் கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று போட்டியில் விளையாடும் அணியில் இருந்து பாய்ச்சுங் பூட்டியா ஏற்கெனவே நீக்கப்பட்டார்.

                கடந்து வந்த பாதைகள்... 1976-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி சிக்கிமில் பிறந்தார் பூட்டியா. 1995-ம் ஆண்டு தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டார். அதன்பிறகு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை வகித்தார். 100-க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 43 கோல்களை அடித்துள்ளார்.

 சர்வதேச அளவில் 100 போட்டிகளில் விளையாடியுள்ள ஒரே இந்தியர். இவரது தலைமையிலான இந்திய அணி தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப் போட்டிகளில் மூன்று முறையும், நேரு கோப்பையை 2 முறையும் வென்றுள்ளது. 2008-ல் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சேலஞ்ச் கோப்பையை வென்றுள்ளது. 1984-க்குப் பிறகு இந்திய அணியை ஆசிய கோப்பை போட்டியில் விளையாட தகுதிபெற வைத்த பெருமையும் இவரையேச் சாரும். கால்பந்து போட்டியில் பூட்டியாவின் அளப்பரிய பங்களிப்பை கெüரவிக்கும் வகையில் அவருக்கு அர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ விருது ஆகியவை வழங்கப்பட்டன. நட்சத்திர வீரரான பாய்ச்சுங் பூட்டியாவின் ஓய்வு இந்திய கால்பந்து அணியில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

  COURTESY :DINAMANI

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...