Wednesday, September 7, 2011

டில்லி ஐகோர்ட் வாசலில் குண்டு வெடிப்பு; 12 பேர் பலி; 60 பேர் காயம்

புதுடில்லி: டில்லி ஐகோர்ட் 5-வது கேட் அருகே இன்று காலை 10: 17 மணிக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 12 பேர் பலியானதாகவும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
டில்லி ஐகோர்ட்டில் வழக்கம் போல் இன்று காலை நீதிபதிகள், வக்கீல்கள் உள்ளிட்ட பலரும் பணிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது ஐகோர்ட்டின் 5-வது கேட் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனையடுத்து கோர்ட் முழுவதும் பரபரப்பு ‌ஏற்பட்டது. இந்த சம்பவத்தில்12 பேர் பலியானார்கள். மேலும்50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்து காயமடைந்தவர்களை சப்தர்ஜங், ராம் மனோகர் லோகியா ஆகிய மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வண்டிகள் விரைந்துள்ளன.

சம்பவம் குறித்து, உள்துறை அமைச்சகம் நிலைமை குறித்து விவாதித்து வருகிறது. டில்லி போலீஸ் கமிஷனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டார். ஒரு பிரீப்கேசில் இந்த குண்டு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. சம்பவ நடந்த இடத்தில் குண்டுவெடிப்பிற்கான தடயங்களை ஆய்வு செய்ய தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தேசிய பாதுகாப்புப்படையினர் (என்.எஸ்.ஜி), தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சம்பவ இடத்தினை ஆய்வு செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...