Friday, December 26, 2014

புதுவையில் சிங்கத்தின் புது தடம்


தம்பிசெல்வம்


திரு.கணேஷ்


புதுச்சேரியை சேர்ந்த திரு சிவக்குமார்

தம்பிசெல்வம் இராஜா மயிலாடுதுறை திரு.கணேஷ்

திருநள்ளாறை சேர்ந்த திரு சரவண ரமேஷ்





தம்பிசெல்வம் இராஜா மயிலாடுதுறை திரு.கணேஷ்
  முன்பு பிரான்ஸின் ஒரு காலனியாகவும், தற்போது இந்தியாவின் ஒரு யூனியன் பிரதேசமாகவும் விளங்கும் புதுச்சேரி ஒரு பன்னாட்டு கலப்பு கலாச்சாரம் கொண்ட சிறப்புப் பகுதி.புத்தக கண்காட்சிக்கும் பெயர் பெற்றது.அவற்றில் சிறப்பானது 100 க்கும் மேற்ப்பட்ட ஸ்டால்களுடன் அக்டோபரில் AFT மைதானத்தில் நடைபெறும் அரசு  புத்தக கண்காட்சி ஒன்று.
அதைவிட குறைவான ஸ்டால்களுடன் வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில் புதுச்சேரி கூட்டுறவு சங்கத்தினால் டிசம்பரில் நடத்தப்படும் புத்தக கண்காட்சி ஒன்று.
தற்போது அரசு  புத்தக கண்காட்சியில் எதோ சிறு குறைபாடு என அறிய வந்தது. டிசம்பரில் புதுச்சேரி கூட்டுறவு சங்கத்தினால் நடத்தப்படும் புத்தக கண்காட்சியில் இந்திய புத்தக கண்காட்சியில் முதன் முறையாக நமது லயன் காமிக்ஸ் பங்கேற்றுள்ளது வடகிழக்கு தமிழகத்தில் நமது லயன் காமிக்ஸின் மீள்வருகைக்கு ஒரு நல்ல கட்டியமாக அமையும் என நம்புவோம்.
கிருஸ்துமஸ் தினத்தின் விடுமுறையைப் பயன்படுத்தி புதுச்சேரி  புத்தக கண்காட்சிக்கு பயணத்தைத் துவக்கினேன்.3 மணி நேர பிரயாணத்தில் புதுச்சேரியை அடைந்து கண்காட்சிக்குள் புகுந்தேன்.
புத்தக கண்காட்சியில் நமது லயன் காமிக்ஸ் ஸ்டால் எண் 48 ஐ ஆக்கிரமித்திருந்தது. அதற்கான சிறு விளம்பரங்கள் புத்தக கண்காட்சி அரங்கு முழுவதும் நிறைந்து இருந்தது ஒரு சிறப்பான அமைப்பாக இருந்தது. அவற்றை படித்து விட்டு நமது லயன் காமிக்ஸின் மீள்வருகை குறித்து அறிந்து ஒரு புன்னகையுடன் சென்றவர்கள் பலர்.
நமது லயன் காமிக்ஸ் ஸ்டாலினை அலங்கரித்தது நமது அலுவலகபுது வரவுகளான திரு.கணேஷ் மற்றும் தம்பிசெல்வமும்.
 ஈரோடு புத்தக கண்காட்சியில் நமது லயன் காமிக்ஸ் ஸ்டாலினை பார்த்துவிட்டு அந்த எதிர்பார்ப்புடன் சென்ற எனக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது நமது ஸ்டாலில் இருந்த கூட்டம்( ஒரே நபர்). விடுமுறை நாள் என்பதால் கடும் கூட்டம் இருக்கும் என நினைத்து இருந்தேன்.( ஈரோடு புத்தக கண்காட்சியில் ஈரோடு நண்பர்களின் பங்களிப்பை மனம் நினைத்துப் பார்த்தது. நண்றி ஈரோடு நண்பர்களே!!!)
 திரு.கணேஷ் அவர்களிடம் விற்பனைக் குறித்து வினவினேன். மீண்டும் அதிர்ச்சி. சரி விற்பனையை நாமே துவங்குவோம் என்று 4 புத்தகங்களை மீண்டும் 465/-க்கு ( நண்பர்களுக்கு பரிசளிக்க மட்டுமே!!!) வாங்கி விற்பனையை 11 மணிக்கு துவக்கினேன். அதன் பின்னர்  சுமார் 12 மணியளவில் புதுச்சேரியை சேர்ந்த திரு சிவக்குமார் 2 காமிக்ஸ் வாங்கினார். குழந்தைகள் பலரும் ஆங்கில காமிக்ஸ் இல்லையா? என்று கேட்டு விட்டு விலகினர்!!( எங்களது இளம் பருவத்தில் பிடிக்காத ஒரே பாடம் ஆங்கிலம் என்பது நினைவுக்கு வந்தது??) 2.15 மணியளவில் திருநள்ளாறை சேர்ந்த திரு சரவண ரமேஷ்(புதுச்சேரியில் வசிப்பவர்) சில காமிக்ஸ் வாங்கினார். அவர் தினமும் லயன் காமிக்ஸ் ஸ்டாலிற்கு வருவதாக தம்பி செல்வம் சொன்னார். அவரிடமும் , திரு சிவக்குமாரிடமும் சந்தா சலுகைகளை விளக்கி சந்தா கட்ட வலியுறுத்தினேன்.
புத்தக கண்காட்சியில் முதலில் 25 ஸ்டால்கள் முதல் தளத்திலும், மற்றவை கீழ் தளத்திலும் அதிலும் நமது ஸ்டால் மிகவும் கடைசியாக இருந்தாலும் வாசகர்கள் சற்றே சோர்வுடன் நமது ஸ்டாலை அனுகினர். மிகவும் சுமாரான விற்பனை எனினும் நமது தடம் தமிழகம் எங்கும் பதிய இது ஒரு ஆயத்தம் என எண்ணி சுமார் 4 மணியளவில் நண்பர் திரு.கணேஷ் மற்றும் தம்பி செல்வமிடமும் விடைப்பெற்று திரும்பினேன்

6 comments:

  1. இனிவரும் காலங்களில் இன்னும் வரவேற்பு அதிகரிக்கும் என்று நம்புவோமாக!

    அழகான, சோகமான, குட்டிப் பதிவுக்கு நன்றி ராஜா அவர்களே! :)

    ReplyDelete
  2. நன்றி நண்பர்களே

    ReplyDelete
  3. முதல் ஆண்டு தானே அதனால் லேசான வரவேற்பு . போகப்போக பிக்கப் ஆகிடும் நண்பரே.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...